உள்ளூர் செய்திகள்
இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
- இதற்கு அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
- ஆர்ப்பாட்டத்தின் போது டாஸ்மாக் கடைகளை அகற்றாவிட்டால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை கிளை நூலகம் அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது டாஸ்மாக் கடைகளை அகற்றாவிட்டால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் கோரிக்கை சம்பந்தமாக கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.