உள்ளூர் செய்திகள்
விழுப்புரம் - புதுவை சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க இரும்பு தடுப்புகள்
- மக்கள் குடியேறி வருவதால் விழுப்புரம் நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
- இதற்கு வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்
விழுப்புரம்:
விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள விரிவாக்கப் பகுதிகளில் மக்கள் குடியேறி வருவதால் விழுப்புரம் நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக விழுப்புரம் - புதுவை சிக்னலில் இருந்து கம்பன் நகர் வரை போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்பட்டு வந்தது. இந்த சாலையின் நடுவில் வைக்கப்பட்ட ரிப்லெக்ஸ் தடுப்பு கட்டை சேதமடைந்ததால், போக்குவரத்து நெரிசல் அதிகமானது. இதையடுத்து விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வசந்த் மற்றும் போலீசார், புதிய இரும்பினால் ஆன தடுப்புகளை அமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளனர். இதற்கு வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.