ஜல் ஜீவன் திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்ற ஆலோசனை
- ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் அனைத்து ஊரகக் குடியிருப்புகளுக்கும் தனி நபர் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
- ஜீவன் மிஷன் திட்டத்தினை மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டு வெற்றிகரமாக செயல்படு த்துவது அரசின் நோக்க மாகும்.
தேனி:
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் தேனி மாவட்டத்திலுள்ள அனைத்து ஊரகக் குடியிருப்புகளுக்கும் தனி நபர் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக 50 சதவீதத்துக்கும் மேல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் வாழும் கிராமத்திலிருந்து திட்ட மதிப்பீட்டுத் தொகையில் 5 சதவீதம் மற்ற கிராமங்களிலிருந்து 10 சதவீதம் பொதுமக்கள் பங்களிப்புத் தொகையாக வசூல் செய்து பணிகளை செயல்படுத்திட அரசு மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தினை மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டு வெற்றிகரமாக செயல்படு த்துவது அரசின் நோக்க மாகும்.
எனவே, ஊரகப் பகுதி களில் உள்ள பொதுமக்கள் தங்களது கிராமத்திற்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள பொதுமக்கள் பங்களிப்புத் தொகையினை காலதாமத மின்றி ஊராட்சி நிர்வாகத்தி டம் செலுத்திட வேண்டும் என தேனி மாவட்ட கலெ க்டர் முரளீதரன் தெரி வித்துள்ளார்.