உள்ளூர் செய்திகள்

சமூக விரோதிகளின் கூடாரமான கல்வராயன்மலை

Published On 2022-08-14 06:25 GMT   |   Update On 2022-08-14 06:25 GMT
  • சமூக விரோதிகளின் கூடாரமான கல்வராயன்மலை மாறி வருகிறது.
  • எவ்வளவு நடவடிக்கை எடுத்தாலும் சமூக விரோதிகள் தொடர்ந்து இந்த மலையில் சாராயம் காய்ச்சுவதை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையத்தில் கல்வராயன் மலை உள்ளது. இந்த மலை சுமார் 2,000 சதுர பரப்பளவு கொண்டது. 171 மலை கிராமங்களை கொண்ட 75,000-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் இங்கு வசிக்கின்றனர். மேலும் இந்த மலை அடர்ந்த வனப் பகுதிகளைக் கொண்டது. சேலம், தர்மபுரி திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி இவர்களை இணைக்கும் முக்கிய பகுதியாக விளங்கிறது.இந்த கல்வராயன் மலையில் வனவிலங்குகள் இல்லை. மேலும் இது உயரம் குறைவான மலையாக உள்ளது. ஆனால் மலை முழுவதும் அடர்ந்த வனப்பகுதியாக உள்ளதால் சமூக விரோதிகளுக்கு உகந்த மலையாக உள்ளது.

சமூக விரோதிகள் அதிகமாக இங்கு இருப்பதால் சாதாரண பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் யாரும் இங்கு வர அச்சப்படுகின்றனர். இதனால் சமூக விரோதிகள் மற்றும் கள்ளச்சாராய வியாபாரிகள் மிகவும் எளிதாக சாராயம் காய்ச்சுவதற்கு தேவையான பொருள்களை கொண்டு செல்கின்றனர். பின்னர் அவர்கள் கல்வராயன் மலையில் நீரோடை ஓரமாக கள்ளச்சாராயம் காய்சுகின்றனர்.இங்கு காய்ச்சப்படும் கள்ளச்சாராயம் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், மற்றும் மலை அடிவாரத்தில் உள்ள மாவட்டங்கள், பல்வேறு இடங்களுக்கு விற்பனை ஆகிறது.

இதனை தடுக்க கச்சிராய பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையிலான போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார். இவரது சோதனையில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 1 லட்சம் லிட்டர் சாராய ஊறல் கொட்டி அளிக்கப்பட்டது. மேலும் 150 -க்கு மேற்பட்ட கள்ளச்சார வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். 10-க்கும் மேற்பட்டோர் குண்டர் தடுப்பு சட்டத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

இருந்த போதிலும் இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் போலீசார் தரப்பில் எடுத்து வருகின்றனர். மேலும் எவ்வளவு நடவடிக்கை எடுத்தாலும் சமூக விரோதிகள் தொடர்ந்து இந்த மலையில் சாராயம் காய்ச்சுவதை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.இந்த பகுதியை சேர்ந்த மதுவிலக்கு போலீசார் உடனடியாக இதில் தலையிட்டு சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவரும் கல்வராயன் மலையை சமூக விரோதிகளின் அவர்களின் பிடியிலிருந்து பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News