கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் தோரண நுழைவு வாயிலில் மோதிய சுற்றுலா பஸ்
- பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
- கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை
கன்னியாகுமரி:
கர்நாடக மாநிலத்தில் இருந்து 60 பயணிகள் ஒரு பஸ்சில் கன்னியாகுமரிக்கு நேற்று சுற்றுலா வந்தனர்.
இவர்கள் வந்த சுற்றுலா பஸ் நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு செல்லும் தோரண நுழைவுவாயில் வழியாக செல்ல முயன்றது அப்போது அந்த பஸ்சின் மேல் கூரை நுழைவாயிலின் மேல்பகுதியில்மோதியது. இதில் அந்த நுழைவாயி லின் மேல் பகுதி அந்த சுற்றுலா பஸ்சின் மீது இடிந்து விழுந்தது.
பஸ்சின் மீது நுழைவு வாயிலின் மேல் பகுதி உடைந்து விழுந்ததை பார்த்து அந்த பஸ்சில் இருந்த சுற்றுலா பயணிகள் அலறி அடித்துக் கொண்டு வெளியே குதித்து உயிர் தப்பினார்கள்.
இந்த விபத்து நடந்த இடத்துக்கு அருகில் பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏறுவ தற்காக காத்திருந்த சுற்றுலா பயணிகளும் இதை கண்டு அலறி அடித்துக் கொண்டு ஓடினார்கள். சுற்றுலாபஸ் விபத்துக்குள்ளான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது பற்றி தகவல் அறிந்த தும் கன்னியாகுமரி போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசா ரணை நடத்தினார்கள். அந்த பஸ்சை பல மணி நேரம் போராடி மீட்டனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.