கன்னியாகுமரியில் ரெயில் நிலையம் அருகே பிணமாக கிடந்த சாமியார்
- அவர் யார்? எந்த ஊர்? எப்படி இறந்தார்? என்ற விவரம் தெரிய வில்லை.
- அய்யப்ப பக்தராக இருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி ரெயில் நிலையம் அருகே புதிதாக கட்டுமான பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. இதற்காக அங்கு கல், மண் மற்றும் கட்டுமான பொருட் கள் குவித்து வைக்கப்பட்டு உள்ளது.
இந்த கட்டுமான பொருட் களுக்கு இடையே நேற்று மாலை சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். சுமார் 5 அடி உயரம் கொண்ட அவர் காவிகலர் வேட்டியும், ரோஸ் நிற சட்டையும் அணிந்து இருந்தார். அவர் யார்? எந்த ஊர்? எப்படி இறந்தார்? என்ற விவரம் தெரிய வில்லை.
காவி நிற வேட்டி அணிந்து இருந்ததால் அவர் சாமியாராக இருக்கலாம் என்று தெரிகிறது. இது பற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப் பற்றி விசாரணை நடத்தி னார்கள். அதன் பிறகு உடலை பிரேத பரிசோ தனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட் டது.
இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் கழுத்தில் மாலைகள் அணிந்து இருந்ததால் அவர் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த அய்யப்ப பக்தராக இருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.