உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலில் கடைகளுக்கு சீல் வைப்பு

Published On 2022-09-05 08:21 GMT   |   Update On 2022-09-05 08:21 GMT
  • வியாபாரிகள் வாக்குவாதம் செய்தனர்
  • கடைகளில் வாடகை பிரச்சினை இருந்து வந்தது.

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் அண்ணா விளையாட்டரங்கம் உள்ளது.இந்த பகுதியில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் சுமார் 23 கடைகள் உள்ளது. இந்த கடைகள் வாடகைக்கு விடப்பட்டிருந்தது.இந்த கடைகளில் வாடகை பிரச்சினை இருந்து வந்தது.

இதையடுத்து விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். இந்த நிலையில் இன்று கடைகளை சீல் வைக்க அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர்.இதற்கு கடைகாரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் அதிகாரிகளுக்கும் கடைக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சேகர் மற்றும் வடசேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.ஏற்கனவே இந்த கடைகளுக்கு பலமுறை கால அவகாசம் வழங்கி விட்டதாகவும் கடைகளை காலி செய்யுமாறு அதிகாரிகள் கூறினார்கள்.

ஆனால் கடைக்காரர் ஒருவர் தனது கடைக்குள் அமர்ந்து விட்டு வெளியே வருவதற்கு மறுப்பு தெரிவித்தார்.உடனே போலீசார் அவரை குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றினார்.இதை தொடர்ந்து அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது. இதேபோல் மீதமுள்ள கடைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைக்கும் பணியை மேற்கொண்டனர். கடைகளுக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News