உள்ளூர் செய்திகள்

ஆவின் நிர்வாகம் விஜிலென்ஸ், அதிகாரிகள் மூலமும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை மிரட்டுவதை கைவிட வேண்டும்

Published On 2023-09-02 06:51 GMT   |   Update On 2023-09-02 06:51 GMT
  • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.வலியுறுத்தல்
  • பொது மக்களுக்கு பால் விற்பனை செய்கின்ற காரணத்தினால் தான் இச்சங்கங்கள் தொடர்ந்து செயல்பட்டுகிறது.

நாகர்கோவில், :

முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது:-

குமரி மாவட்டத்தில் குறைந்த எண்ணிக்கையில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை விஜிலென்ஸ் அதிகாரிகளை கொண்டும், துறை அதிகாரி களை கொண்டும் உள்ளூர் பொதுமக்களுக்கு பாலினை விற்பனை செய்யக்கூடாது எனவும் நிர்ப்பந்தம் செய்து வருகின்றனர். இதனால் பால் உற்பத்தியாளர் கூட்டு றவு சங்கங்கள் மூலம் பொது மக்களுக்கு நேரடியாக விற்பனை செய்கின்ற பாலும் கிடைக்காமல் போகிறது. பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்கின்ற பாலின் விலையை விட ஆவினுக்கு கொடுக்கப்ப டுகின்ற பாலின் விலை குறைவாக கிடைப்பதால் தொடர்ந்து பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் நலிவடைகின்ற சூழ்நிலை உள்ளது. பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் நலிவடைந்த பொது மக்களுக்கு பால் விற்பனை செய்து வருகின்ற காரணத்தினால் தான் இச்சங்கங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

ஆனால் உள்ளூர் பொது மக்களுக்கு விற்பனை செய்யக்கூடாது எனக் கூறுவதால், நஷ்டத்திற்கு பாலினை ஆவினுக்கு விற்பனை செய்ய நிர்ப்பந்திப்பதாலும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் நலிவடைகின்ற சூழ்நிலை ஏற்படுகிறது.

ஏற்கனவே குமரி மாவட்டத்தில் இயங்கி வந்த சுமார் 121 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் நலிவடைந்து கலைக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது ரீத்தாபுரம், சுருளோடு, பேச்சிப்பாறை ஆகிய ஊர்களில் 3 புதிய பால் உற்பத்தியாளர் கூட்டு றவு சங்கங்கள் ஆரம்பிக்கப் பட்ட நிலையில் இச்சங்கங்க ளுக்கு தேவையான அடிப் படை வசதிகள் செய்து கொடுக்காத காரணத்தினால், பல மாதங்கள் ஆகியும் இச்சங்கங்களின் மூலம் பால் உற்பத்தி செய்யப்படவில்லை.

கடந்த ஆட்சியில் தமிழ் நாட்டில் பால் உற்பத்தி இந்தியா விலேயே 2-வது இடத்தில் இருந்த நிலையில் தற்போது தமிழ்நாடு 4-வது இடத்திற்கு தள்ளப்படுகிறது. கர்நாடகா 2-வது இடத்தையும், உத்திரபிரதேசம் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத் தக்கது.

எனவே குமரி மாவட்ட ஆவின் நிர்வாகம் பால் உற்பத்தியை அதிகரிக்கும் விதத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும், இச்சங்கங்க ளில் உள்ள உறுப்பினர்கள் வைத்துள்ள கறவை மாடுகளுக்கு தேவையான கலப்பு தீவனங்கள் முறையாக கிடைப்பதற்கும், மருத்துவ வசதிகள் பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விட்டு விட்டு விஜிலென்ஸ் அதிகாரிகள் மூலம் நலிந்த நிலையில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை மிரட்டுகின்ற போக்கினை ஆவின் நிர்வாகம் கைவிட வேண்டும். சங்கங்களை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News