உள்ளூர் செய்திகள்

பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.27,500 வழங்க வேண்டும்

Published On 2023-04-18 06:19 GMT   |   Update On 2023-04-18 06:19 GMT
  • நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
  • இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் காப்பீடு செய்ததன் அடிப்படையில் பணத்தை தருமாறு கேட்டுள்ளார்

நாகர்கோவில் :

சுசீந்திரத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் பாலிசி எடுத்திருந்தார். அதன் பின்னர் தனது மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் திருவனந்தபுரத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

சிகிச்சைக்காக பணம் செலுத்தியுள்ளார். அதன் பின்னர் இந்த பணத்தை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் காப்பீடு செய்ததன் அடிப்படையில் பணத்தை தருமாறு கேட்டுள்ளார். அதில் ஒரு பகுதியை மட்டும் இன்சூ ரன்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது. மீதி பணத்தையும் தருமாறு கேட்டதற்கு இன்சூரன்ஸ் நிறுவனம் சரியான காரணங்களை கூறாமல் சிகிச்சைக்காக செலுத்தப்பட்ட பணத்தை தர மறுத்துள்ளது.

இதனால் புகார்தாரர் அதிர்ச்சியும், தாங்க முடியாத வேதனையும் அடைந்து உடனடியாக வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி யுள்ளார். ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோர் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு சிகிச்சைக் காக ஏற்கனவே செலவழித்த பணத்தில் மீதித் தொகையான ரூ.20,000, நஷ்ட ஈடு ரூ.5,000 மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.2,500 ஆக மொத்தம் 27,500-ஐ ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News