மண்டைக்காடு புதூரில் 2 பெண் குழந்தைகள் பெற்றதால் மனைவிக்கு டார்ச்சர் - கணவர் மீது வழக்கு
- ஆண் பிள்ளை பெற்றுத் தரவில்லை என கூறி அவதூறாக பேச்சு
- குளச்சல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கன்னியாகுமரி :
மண்டைக்காடு புதூரை சேர்ந்தவர் அஸ்வின் (வயது 28). கடலில் மீன் பிடித்தொழில் செய்து வருகிறார்.
இவர் அதே பகுதியை சேர்ந்த சோனியாவை (24) கடந்த 8 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது.
இதனால் அஷ்வின் சோனியாவிடம் தகராறு செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 13-ந்தேதி அஷ்வின், சோனியாவிடம் ஆண் பிள்ளை பெற்றுத் தரவில்லை என கூறி அவதூறாக பேசியதுடன் வாயில் துணியை வைத்து அழுத்தி டார்ச்சர் செய்துள்ளார். மேலும் உன் தாய் வீட்டிற்கு ஓடி விடு என மிரட்டியும் உள்ளார்.
இதில் படுகாயமடைந்த சோனியா குளச்சல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மண்டைக்காடு போலீசார் அஷ்வின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.