குமரி மாவட்டத்தில் தொடர் மழையினால் நிரம்பிய அணைகள்
- சிற்றாறு-1 மற்றும் சிற்றாறு-2 அணை கள், மாம்பழத்துறையாறு அணை ஆகியவையும் முழுமையாக நிரம்பின.
- தாமிரபரணி ஆறு, பழையாறு உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீர் அதிக அளவில் செல்கிறது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவ லாக மழை பெய்தது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள அணை களுக்கு தண்ணீர் வரத்து அதிகமாகவே உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் தனது முழு கொள்ளவான 25 அடியை எட்டி உள்ளது. இதேபோல் சிற்றாறு-1 மற்றும் சிற்றாறு-2 அணைகள், மாம்பழத்துறையாறு அணை ஆகியவையும் முழுமையாக நிரம்பின.
48 அடி ெகாள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 41.26 அடியாக உள்ளது. அணைக்கு 498 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 77 அடி கொண்ட பெருஞ்சாணி அணையில் நீர்மட்டம் 70.90 அடியாக உள்ளது.அணைக்கு விநாடிக்கு 445 அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அந்த அணை களுக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்து விடப் பட்டது. இதன் காரணமாக தாமிரபரணி ஆறு, பழையாறு உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீர் அதிக அளவில் செல்கிறது. திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.