உள்ளூர் செய்திகள்

கொட்டாரம் ராமர்கோவிலில் ராம நவமியை யொட்டி பல வண்ண மலர்களால் புஷ்பாபிஷேகம் நடந்த போது எடுத்த படம்.

கொட்டாரம் ராமர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

Published On 2023-03-31 08:20 GMT   |   Update On 2023-03-31 08:20 GMT
  • திரளான பக்தர்கள் பங்கேற்பு
  • இந்த கோவிலில் 30-வதுஆண்டுஸ்ரீராமநவமி விழா 2 நாள் நடந்தது.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் நந்தவனத்தில் ஸ்ரீ ராமர் கோவில் அமைந்து உள்ளது. தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையஆட்சித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கோவிலில் 30-வதுஆண்டுஸ்ரீராமநவமி விழா 2 நாள் நடந்தது.

முதல் நாள் மங்கள இசையும் அதைத்தொடர்ந்து கணபதி ஹோமம் நடந்தது. பின்னர் காலை 7 மணிக்கு அபிஷேக மும், 7.30 மணிக்கு சிறப்பு தீபாராதனையும் நடந்தது. அதன் பின்னர் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அகண்ட ராம நாம ஜெபமும், மாலை 6.30 மணிக்கு தீபாராதனையும், இரவு 7 மணிக்கு பல்சுவை பட்டிமன்றமும், 8 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை மற்றும் பக்தர்களுக்கு அருட் பிரசாதம் வழங்குதலும் நடந்தது.

2-வதுநாள் மங்கள இசையும் அதைத் தொடர்ந்து கலச பூஜையும், நடந்தது. பின்னர் காலை 8 மணிக்கு சிறப்பு பஜனையும், கலை 9.30 மணிக்கு அபிஷே கமும், 11.15மணிக்கு சிறப்பு தீபாராதனையும் நடந்தது. அதன் பின்னர் 5.15 மணிக்கு ஸ்ரீராமஜெயம் எழுத்து போட்டியும் நடந்தது. 11.30 மணிக்கு மகா அன்னதான மும் நடந்தது. மாலையில் சமயசொற்பொழிவும், தீபா ராதனையும் நடந்தது.அதன் பிறகு ஸ்ரீ ராமநாம சங்கீர்த்த னமும் சாயராட்சை தீபாராதனையும், இரவு ராமபெருமானுக்கு பிச்சி, முல்லை, மல்லிகை, மரிக்கொழுந்து, ரோஜா, துளசி, பச்சை, கொழுந்து, அரளி, தெற்றிபூ போன்ற பல வகையான மலர்களால் புஷ்பாபிஷேகம் நடந்தது.

அதன் பின்னர் ஸ்ரீராம ருக்கு ஊஞ்சலில்தாலாட்டு நிகழ்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து தீபாராதனை மற்றும் பக்தர் களுக்கு அருட்பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழாவுக்கான ஏற்பாடு களை கொட்டாரம் ஸ்ரீராமர் கோவில் பக்தர்கள் சங்கத்தினர் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News