உள்ளூர் செய்திகள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 27 ஆண்டுகளாக விபத்து இல்லாமல் இயக்கிய அரசு பஸ் ஓட்டுனருக்கு விருது

Published On 2023-04-28 06:38 GMT   |   Update On 2023-04-28 06:38 GMT
  • தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 27 ஆண்டுகளாக விபத்து இல்லாமல் இயக்கிய அரசு பஸ் ஓட்டுனருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
  • ஓட்டுனர் ரவிச்சந்திரன் கரூர் மண்டல பொது மேலாளர் சிவசங்கரனை நேரில் சந்தித்து விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார்

கரூர்:

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் லிமிடெட் கரூர் மண்டலம் குளித்தலை கிளையில் பணிபுரியும் ஓட்டுனர் ரவிச்சந்திரன் (வயது58). இவர் கடந்த 27 ஆண்டுகளாக விபத்து இல்லாமல் சிறப்பாக பணி புரிந்ததற்காக டெல்லியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு தேசிய விருது விழாவில் ரவிச்சந்திரனுக்கு மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி சிறந்த ஓட்டுநருக்கான விருதினை வழங்கினார். இவ்விருதினை பெற்ற ஓட்டுனர் ரவிச்சந்திரன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஓட்டுனர் ரவிச்சந்திரன் கரூர் மண்டல பொது மேலாளர் சிவசங்கரனை நேரில் சந்தித்து விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்வின் போது துணை மேலாளர் (வணிகம்&தொழில்நுட்பம்) சுரேஷ்குமார், உதவி மேலாளர் (தொழில்நுட்பம்) சேகர் மற்றும் உதவி பொறியாளர் கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Tags:    

Similar News