கரூர் மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
- கரூர் மாவட்டத்தில் கரூர், குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் நீதிமன்றங்களை வழக்கறிஞர்கள் நேற்று புறக்கணித்தனர்.
- குளித்தலை மற்றும் கிருஷ்ணராயபுரம் நீதிமன்றங்களை குளித்தலை வழக்கறிஞர் சங்க தலைவர் சாகுல்ஹமீது தலைமையில் குளித்தலையில் 10 பெண் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 185 வழக்கறிஞர்கள், கிருஷ்ணராயபுரத்தில் 2 பெண் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 25 வழக்கறிஞர்கள் புறக்கணித்தனர்.
கரூர்
உயர்நீதிமன்ற வழக்கறிஞர் படுகொலையைக் கண்டித்து கரூர் மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களை புறக்கணித்தனர்.
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சாமிநாதன் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து கரூர் மாவட்டத்தில் கரூர், குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் நீதிமன்றங்களை வழக்கறிஞர்கள் நேற்று புறக்கணித்தனர்.
கரூர் நீதிமன்றத்தை கரூர் வழக்கறிஞர் சங்க தலைவர் மாரப்பன் தலைமையில் 75 பெண் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 570 வழக்கறிஞர்கள், அரவக்குறிச்சி நீதிமன்றத்தை அரவக்குறிச்சி வழக்கறிஞர் சங்க தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் தலைமையில் 15 வழக்கறிஞர்கள்,
குளித்தலை மற்றும் கிருஷ்ணராயபுரம் நீதிமன்றங்களை குளித்தலை வழக்கறிஞர் சங்க தலைவர் சாகுல்ஹமீது தலைமையில் குளித்தலையில் 10 பெண் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 185 வழக்கறிஞர்கள், கிருஷ்ணராயபுரத்தில் 2 பெண் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 25 வழக்கறிஞர்கள் புறக்கணித்தனர்.