உள்ளூர் செய்திகள்
வயதான தம்பதி கொலை; குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை
- வயதான தம்பதி கொலையில் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது
- மயிலி அணிந்திருந்த மூன்றே முக்கால் பவுன் தங்க நகை மற்றும் குடிசை வீட்டில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
கரூர்,
திருச்சி மாவட்டம் காட்டுபுத்துார் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல், இவரது மனைவி மயிலி. இவர்கள் கரூர் மாவட்டம் வாங்கல் அருகே ஓடையூரில் சரவணன் என்பவருக்கு சொந்தமான மாங்காய் தோட்டத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வந்தனர். நேற்று முன்தினம் தோட்டத்தில் உள்ள குடிசையில் தங்கவேலும், மயிலியும் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தனர். மேலும் மயிலி அணிந்திருந்த மூன்றே முக்கால் பவுன் தங்க நகை மற்றும் குடிசை வீட்டில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இந்த கொலை சம்பவம் வாங்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க திருச்சி டி.ஐ.ஜி., சரவணசுந்தர் உத்தரவுபடி கரூர் எஸ்.பி., சுந்தரவதனம் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.