உள்ளூர் செய்திகள்
- விவசாயி உயிரிழப்பு எதிரொலியாக மலைத்தேனீக்கள் அகற்றப்பட்டது
- தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து மலை தேனீக்களை அகற்றினர்
வேலாயுதம் பாளையம்,
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே கவுண்டன்புதூர் பகுதியில் இருந்த ஒரு தென்னை மரத்தில் ஆயிரக்கணக்கான மலைத்தேனீக்கள் கூடு கட்டி இருந்தது. அந்த வழியாக சென்ற பொதுமக்களை மலை தேனீக்கள் தீண்டி அச்சுறுத்தி வந்தது. இந்நிலையில் கவுண்டன் புதூர் பகுதியைசேர்ந்த விவசாயியான ராமசாமி (63) என்பவர் தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற போது அந்த தேனீக்கள் கடித்ததில் ராமசாமி உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து முனி நாதபுரம் பகுதி ரங்கசாமி (55) என்பவர் கொடுத்த கோரிக்கை புகாரின் பேரில் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து மலை தேனீக்களை அகற்றினர். இதனால் அந்த பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.