குறைதீா்க்கும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
- குறைதீா்க்கும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
- 317 மனுக்களை பெற்றுக்கொண்டாா்.
கரூா் :
கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கா் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 317 மனுக்களை பெற்றுக்கொண்டாா்.
பின்னா், மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டாா். தொடா்ந்து முகாமில் ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.2,194 மதிப்பிலான பிரைலி கடிகாரம், கருப்புக் கண்ணாடி, மடக்கு குச்சியையும், இரண்டு மாற்றுத்திறனாளிக்கு தலா ரூ.12,500 மதிப்பில் கைப்பேசிகளையும், ஒரு பயனாளிக்கு ரூ.2,820 மதிப்பில் காதொலி கருவியும், கண் பாா்வையற்ற ஒருவருக்கு சுயதொழில் தொடங்க மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.10ஆயிரம் வழங்கப்பட்டதற்கான ஆணையும், பாலம் திட்டத்தின் கீழ் ஒரு பெண்ணுக்கு தனியாா் வேலைக்கான உத்தரவுக்கான ஆணையையும் ஆட்சியா் வழங்கினாா்.