உள்ளூர் செய்திகள்

''கானகத்திற்குள் கரூர்''திட்டத்தில் மரங்கள் பராமரிப்பு

Published On 2023-09-24 06:16 GMT   |   Update On 2023-09-24 06:16 GMT
  • மகிழம், மந்தாரை, சரக்கொன்றை, பூவரசன், பூங்கம் உள்ளிட்ட நாட்டு மரங்கள் நடப்பட்டு தொடர்ச்சியாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
  • முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் ஆய்வுமகிழம், மந்தாரை, சரக்கொன்றை, பூவரசன், பூங்கம் உள்ளிட்ட நாட்டு மரங்கள் நடப்பட்டு தொடர்ச்சியாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

கரூர், 

கரூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் எம்.ஆர்.வி-டிரஸ்ட் மூலம் "கானகத்திற்குள் கரூர்" என்று செயல் திட்டம் மூலமாக, கரூர் மாவட்டத்தை பசுமையாக்கும் வகையில் கடந்த 2019 முதல் 2021 வரை 30,000 க்கும் மேற்பட்ட மகிழம், மந்தாரை, சரக்கொன்றை, பூவரசன், பூங்கம் உள்ளிட்ட நாட்டு மரங்கள் நடப்பட்டு தொடர்ச்சியாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் மரங்களை நடுவதுடன் மட்டும் இல்லாமல் தொடர்ச்சியாக தண்ணீர் ஊற்றி பராமரிப்பதும், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மரங்களை சுற்றி உள்ள மண் மற்றும் குப்பைகளை அகற்றி மரங்களுக்கு ஊற்றப்படும் நீரானது தேங்கி மரங்கள் செழித்து நிழல் தரும் வகையில் வளர செய்வதை "கானகத்திற்குள் கரூர்" என்ற செயல் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

தற்போது மழை காலம் துவங்க உள்ள நிலையில் மரங்களின் பராமரிப்பு பணியானது கடந்த சில தினங்களாக நடைபெற்று வரும் நிலையில் கரூர் 80 அடி சாலையின் அருகே உள்ள மரங்களை முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது மரக்கிளைகள் மின்சார கம்பங்களில் உரசாமல் இருக்கும் வகையிலும், மரங்களை சுற்றி உள்ள குப்பைகளை அகற்றி தண்ணீர் தேங்கும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என எம்.ஆர்.வி - டிரஸ்ட் தன்னார்வலர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.

மேலும் நான் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நம் கரூர் மக்களுக்காக இந்த மரம் நடும் பணி தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

மரம் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருவது மகிழ்ச்சியாக இருப்பதாக இப்பகுதி சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பாராட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News