உள்ளூர் செய்திகள்

கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் பேச்சியம்மனுக்கு கண் திறப்பு நிகழ்ச்சி

Published On 2022-11-14 06:59 GMT   |   Update On 2022-11-14 06:59 GMT
  • பரமேஸ்வரர் ஆலயத்தில் பேச்சியம்மன் சிலை புதுப்பிக்கப்பட்டு கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
  • இதை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம்பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் ஆலயத்தில் பேச்சியம்மன் சிலை புதுப்பிக்கப்பட்டு கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதை முன்னிட்டு பரமேஸ்வரர் ,மாசாணியம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன், அரசாயி அம்மன், பேச்சி யம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் ,சந்தனம், மஞ்சள் ,திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News