வந்தே பாரத் ரெயிலை வரவேற்க ஒரே நேரத்தில் காத்திருந்த விடுதலை சிறுத்தைகள்- பா.ஜ.க.கட்சியினர் பரபரப்பு நிலவியதால் போலீசார் குவிப்பு
- ரெயில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது.
- ரெயில்வே போலீசார் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டனர்.
விழுப்புரம்:
நெல்லை ரெயில் நிலையத்திலிருந்து நேற்று வந்தே பாரத் ரெயில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த ரெயிலில் அரியலூரில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் ஆகியோரும் தனித்தனியே அமர்ந்து வந்தனர். இந்த ரெயிலை வரவேற்க விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ெரயில் நிலை யத்தில் பா.ஜ.க.வினர் மற்றும் விடுதலை சிறுத்தை கள் கட்சியினர் ஒரே நேரத்தில் குவிந்ததால், திண்டிவனம் போலீசார் மற்றும் ரெயில்வே போலீ சார் சுமார் 100-க்கும் மேற் பட்டோர் குவிக்கப்பட்டனர்.
இதில் விழுப்புரம் எம்.பி. துரை. ரவிக்குமார், பா.ஜ.க.மாவட்ட தலைவர் ராஜேந்திரன்,பா.ஜ.க. மாநில வர்த்தக அணி நிர்வாகி தரம் குழுமம் சின்ராஜ், பா.ஜ.க. நகரத் தலைவர் வெங்கடேச பெருமாள்,மாவட்ட பொது செயலாளர் எத்திராஜ், மாநில நிர்வாகி வக்கீல் பாலசுப்ரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக பா.ஜ.க.வினர் பொது மக்களுக்கு இனிப்பு கள் வழங்கி கொண்டாடினர். மேலும் ராகபைரவி கலைக் கூடத்தின் கலை நிகழ்ச்சியும் திண்டிவனம் ரயில்வே நிலையத்தில் நடைபெற்றது. வந்தே பாரத் ரெயில் முன் நின்று பொது மக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.