சின்ன சேலம் அருகே சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
- வீட்டின் அருகில் உள்ள ஓடை யில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் போது கையும் களவுமாக சிக்கினார்.
- குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சிமாவட்டம், சின்னசேலம் வட்டம், கல்லாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன்(38) அவரது வீட்டின் அருகில் உள்ள ஓடை யில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் போது கையும் களவுமாக சின்ன சேலம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அப்போது அவரிடம் இருந்து 120 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டது. இவர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கள்ளச்சாரயம் விற்பனை செய்யும் குற்றத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் கடத்திய மற்றும் விற்பனை செய்த பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. தொடர்ந்து இதுபோன்று மதுவிலக்கு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் இவர் நட வடிக்கையை கட்டுபடுத்தும் பொருட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், சாராய வியாபாரி ராமச்சந்திரனை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரை செய்ததின் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் , ராமச்சந்திரனை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி நேற்று ராமச்சந்திரனை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப் பட்டார்.