சிறப்பாக பணியாற்றிய போலீஸ்காரர்களுக்கு விருதுகள்
- சித்திரை திருவிழாவில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ்காரர்களுக்கு கமிஷனர் நரேந்திரன்நாயர் விருது வழங்கினார்.
- சித்திரை திருவிழா 22 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்றது.
மதுரை
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா 22 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களின் பாதுகாப்பிற்காக மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்தி ரன் நாயர் தலைமையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப் பட்டனர்.
சித்திரை திருவிழாவில் பாதுகாப்பு பணிகளை சிறப்பாக மேற்கொண்ட போலீஸ் அதிகாரிகள் முதல் கடை நிலை போலீசார் வரை அனைவரையும் பாராட்டும் வகையில் விருந்தும், விருதும் வழங்கு விழாவிற்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
ஆயுதப்படை மைதா னத்தில் நடைபெற்ற விழா விற்கு போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித் சிங்காலோன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவ பிரசாத், இந்து சமய அறநிலையத் துறை மதுரை மண்டல இணை கமிஷனர் செல்லத்துரை, கள்ளழகர் கோவில் துணை கமிஷனர் ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றிய துணை கமிஷனர்கள், கூடுதல் துணை கமிஷ னர்கள், உதவி கமிஷ னர்கள், இன்ஸ்பெக்டர்கள் என அனைவருக்கும் போலீஸ் கமிஷனர் விருது வழங்கி பாராட்டினார்.
தொடர்ந்து போலீசார் அனைவருக்கும் அசைவ-சைவ விருந்து வழங்கப்பட்டது.