உள்ளூர் செய்திகள்

அவனியாபுரம் பஸ் நிலையம் முன்பு அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் பகுதி செயலாளர் ஆட்டோ கருப்பையா தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

ஜெயலலிதா நினைவு நாள்-அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

Published On 2022-12-05 13:45 IST   |   Update On 2022-12-05 13:45:00 IST
  • முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளையொட்டி அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
  • அவனியாபுரம் பஸ் நிலையம் முன்பாக பகுதி செயலாளர் ஆட்டோ கருப்பையா தலைமையில் நடந்தது.

அவனியாபுரம்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவனியாபுரம் பஸ் நிலையம் முன்பாக பகுதி செயலாளர் ஆட்டோ கருப்பையா தலைமையில் வட்ட கழக செயலாளர் கொம்பையா முன்னிலையில் அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் கண்ணன், மகாலிங்கம், பவுண்டு ராஜ், வட்டச் செயலாளர் கமலக்கண்ணன், பகுதி இளைஞரணி செயலாளர் ஓம் ஜெயபிரகாஷ், அம்மா பேரவை செயலாளர் பைபாஸ் ரமேஷ், வெள்ளூர் கார்த்திகேயன், ராதா, முத்து, கணேசத்தேவர், திருப்பதி, ஆட்டோ ராஜ கோபால், கலைப் பிரிவு முத்துப்பாண்டி மற்றும் அவனியாபுரம் கிழக்கு மேற்கு மத்திய பகுதி கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News