உள்ளூர் செய்திகள்

மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்தவர்களை தளபதி எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

சிகிச்சை பெற்று வரும் தி.மு.க.வினருக்கு தளபதி எம்.எல்.ஏ. நிதி உதவி

Published On 2023-08-19 08:52 GMT   |   Update On 2023-08-19 08:52 GMT
  • விபத்தில் காயமடைந்த சிகிச்சை பெற்று வரும் தி.மு.க.வினருக்கு தளபதி எம்.எல்.ஏ. நிதி உதவி செய்தார்.
  • தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க விரும்பி னாலும் ஏற்பாடு செய்து தருவதாகவும் அவர்களிடம் கூறினார்.

மதுரை

ராமநாதபுத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று 18-ந்தேதி மீனவர்கள் நல மாநாடு நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மதுரை திரும்பும் போது ஏற்பட்ட விபத்தில் 9 பேர் காயமடைந்தனர்.

84-வது வார்டு வில்லா புரத்தை சேர்ந்த தங்க பாண்டியன் மனைவி விஜயலெட்சுமி(வயது48), அன்பழகன் மகன் அன்புராஜ் (32) பாலசுப்பிர மணியன் மகன் பால முருகன், செய்யது உசேன் மனைவி சாஜித்(52), மாரி (38), வேல்மணி (43) உள்பட 9 போ் படுகாயமடைந்தனா்.

காயமடைந்தவா்கள் பரமக்குடி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டனா். இந்த விபத்து குறித்து பரமக்குடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக் காக மதுரை அரசு மருத்துவ மனையில் அவர்கள் சேர்க்கப்பட்டனர். அவர்களை மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. செய லாளர் தளபதி எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு நிதியுதவி வழங்கிய அவர் மருத்துவ உதவிகளுக்கு தன்னை அணுகுமாறும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க விரும்பி னாலும் ஏற்பாடு செய்து தருவதாகவும் அவர்களிடம் கூறினார்.

அப்போது பகுதி செயலாளர்கள் கவுன்சிலர் போஸ் முத்தையா, கிருஷ்ணா பாண்டி, வட்டச் செயலாளர் பாலா என்ற பாலசுப்ரமணியன், மூவேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News