கண்மாய்கள் ஏலத்துக்கு கிராம மக்கள் எதிர்ப்பு
- உசிலம்பட்டி அருகே கண்மாய்கள் ஏலத்துக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- இதையொட்டி உசிலம்பட்டி டி.எஸ்.பி. நல்லு தலைமையில் போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் குப்பணம்பட்டி பொதுப்பணித்துறை அலு வலகத்தில் செல்லம்பட்டி ஒன்றியத்தில் உள்ள கண்மாய்கள் மீன் பிடி குத்தகை ஏலம் விடப்பட்டது.
இதில் பொதுப்பணி த்துறை உதவி பொறியா ளர்கள் செல்லையா, கோவிந்தராஜ், பணி ஆய்வாளர் ஒச்சுக்காளை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏலம் நடத்தினர்.
இதில் செல்லம்பட்டி ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கண்மாய்கள், வாலாந்தூர் முதலைக்குளம், விண்ணகுடி உள்பட பல்வேறு கண்மாய்கள் ஏலம் விடப்பட்டது. இதில் விக்கிரமங்கலம், நடுமுதலைக்குளம், செல்லப்பன் கோட்டை கண்மாய் மற்றும் பல்வேறு கண்மாய்கள் ஏலம் ரத்து செய்யப்பட்டது.
நடுமுதலைக்குளம் கண்மாய் ஏலம் நடத்தக்கூடாது என கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் வந்து ஏலத்தை நிறுத்தி வைக்க கோரியும், கண்மாய் ஏலம் நடத்தக்கூடாது எனவும், குப்பணம்பட்டி பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகை யிட்டனர்.
இதைத்தொடர்ந்து நடுமுதலைக்குளம் கண்மாய் ஏலம் நிறுத்தி வைக்கப்பட்டது.கண்மாய்கள் ஏலம் தொடர்பாக இரு தரப்பின ருக்கிடையே தகராறு ஏற்பட்டது. போலீசார் சமரசம் செய்தனர். இதையொட்டி உசிலம்பட்டி டி.எஸ்.பி. நல்லு தலைமையில் போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.