புளியரையில் மகாத்மா காந்தி பொது நூலகம் திறப்பு
- காந்தியின் கனவின்படி பொது நூலகம் சிறப்பாக அமைந்துள்ளது என்று கலெக்டர் ரவிச்சந்திரன் பாராட்டி பேசினார்.
- விழாவில் புளியரை ஊராட்சி தலைவர் அழகிய சிற்றம்பலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செங்கோட்டை:
காந்தியடிகளின் கனவின்படி அடிப் படை வசதிகள் கூட இல்லாத குக்கிராமத்தை தத்தெடுத்து கிராம பணி களை அகில இந்திய காந்திய இயக்கம் மேற்கொண்டு வருகிறது. மகாத்மா காந்தி பொது நூலகம் திறப்பு விழா நடை பெற்றது. அகில இந்திய காந்திய இயக்கத்தின் தலைவர் விவேகானந்தன் கலந்து கொண்டு பேசுகையில், அடிப்படை வசதி இல்லாத குக்கிராமமான செங்கோட்டை அருகே உள்ள புளியரை அடுத்து இருக்கும் மடத்தரை பாறையில் கிராம மக்கள் பொதுநூலகம் வேண்டு என்று கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் பொது நூலகம் ஒன்று அகில இந்திய காந்திய இயக்கம் கட்டிக் கொடுத்துள்ளது. அதன் திறப்பு விழா மிகவும் விமர்சையாக நடந்தது என்றார்.
விழாவில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு பொது நூலகத்தை திறந்து வைத்து மகாத்மா காந்தியின் கனவின்படி பொது நூலகம் சிறப்பாக அமைந்துள்ளது என்று பாராட்டி பேசினார். தலைமையேற்ற அகில இந்திய காந்திய இயக்கத் தலைவர் விவேகானந்தன் பேசும்போது, எதிர்காலத்தில் இது போன்ற அடிப்படை வசதி இல்லாத கிராமத்தை தத்தெடுத்து அரசு உதவியுடனும் மற்றும் காந்தி அன்பர்கள் உதவியு டனும், மக்கள் உதவியுடனும், சிறப்பான காந்திய பணி களை மேற்கொள்ளப்போ வதாக கூறினார். விழாவில் புளியரை ஊராட்சி மன்ற தலைவர் அழகிய சிற்றம்பலம், காந்தியவாதிகள் ராம் மோகன், முத்துசாமி, விஜய லட்சுமி, திருமாறன், அன்பு சிவன், நாகராஜன் ஆகி யோர் கலந்து கொண்டனர். முடிவில் கிராம மக்கள் நன்றி கூறினார்கள்.