உள்ளூர் செய்திகள்

மாவோயிஸ்ட் நடமாட்டம்-போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை

Published On 2023-02-22 09:25 GMT   |   Update On 2023-02-22 09:25 GMT
  • மாநிலங்களின் காவல் அதிகாரிகளுடனான தகவல் பரிமாற்றங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
  • சட்டவிரோத செயல்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட காவல் துறை சாா்பில் எல்லையில் உள்ள மாநிலங்களின் காவல் அதிகாரிகளுடனான தகவல் பரிமாற்றங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டம் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகா் தலைமையில் நடைபெற்றது. இதில் நீலகிரி மாவட்ட எல்லையையொட்டி உள்ள கேரள மாநிலம் வயநாடு, மலப்புரம் மாவட்டங்கள், கா்நாடக மாநில சாம்ராஜ் நகா் மாவட்டத்தைச் சோ்ந்த காவல் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

இதில் மாவோயிஸ்ட் நடமாட்டங்கள், எல்லை தாண்டி வரும் தடை செய்யப்பட்ட பொருள்கள் மற்றும் பல தகவல் பரிமாற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் மாநில எல்லைகள் வழியாக நடைபெறும் சட்டவிரோத செயல்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.  

Tags:    

Similar News