உள்ளூர் செய்திகள்

எம்.பி.பி.எஸ். காலி இடங்களுக்கு மீண்டும் கலந்தாய்வு தொடங்கியது

Published On 2022-11-17 08:55 GMT   |   Update On 2022-11-17 08:55 GMT
  • சிலர் 2 ஒதுக்கீட்டிலும் விண்ணப்பித்து இருந்ததால் அதன் மூலம் ஏற்பட்ட காலி இடங்கள் மற்றும் சேராமல் போன இடங்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
  • 20, 21, 22 ஆகிய 3 நாட்கள் இடங்களை தெரிவு செய்ய வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி இடங்கள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு முதல்கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். ஒரு சிலர் 2 ஒதுக்கீட்டிலும் விண்ணப்பித்து இருந்ததால் அதன் மூலம் ஏற்பட்ட காலி இடங்கள் மற்றும் சேராமல் போன இடங்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

இதற்கான ஆன்லைன் பதிவு இன்று தொடங்கியது. 19-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். 20, 21, 22 ஆகிய 3 நாட்கள் இடங்களை தெரிவு செய்ய வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 24-ந்தேதி கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கப்பட்டு கடிதம் வழங்கப்படும். இதுவரையில் 89-க்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக உள்ளன.

Tags:    

Similar News