உள்ளூர் செய்திகள் (District)

பட்டா மாற்றம் குறித்து சிறப்பு முகாம்

Published On 2023-11-21 10:06 GMT   |   Update On 2023-11-21 10:06 GMT
  • கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்து பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்
  • 2000 க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.

தருமபுரி, 

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பட்டா மாற்றம் செய்வதற்கான சிறப்பு மனுக்கள் பெரும் முகாம் தமிழகம் முழுவதும் நடத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்டி தருமபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு கலைக் கல்லூரி கலையரங்கில் சிறப்பு முகாமினை மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்து பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இந்த சிறப்பு முகாமில் பட்டா, சிட்டாவில் உள்ள எழுத்து பிழை, பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல் உள்ளிட்டவைகளும் சரிபார்க்கபட்டது. இதில் தருமபுரி, பென்னாகரம், காரிமங்கலம், நல்லம்பள்ளி, பாலக்கோடு உள்ளிட்ட 5 ஒன்றியங்களில் இருந்தும் 2000 க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.

முகாமில் கலந்து கொண்ட வர்கள்க ளுக்கு தனித்தனியே இருக்கைகள் அமைக்கபட்டு பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். மேலும் எழுத்து பிழை இருந்தவர்களுக்கு உடனடியாக சரிசெய்யபட்டு திருத்தப்பட்ட பட்டாவை உரியவர்களுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கினார். இதே போன்று அரூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கும் அரூரில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், ஆர்.டி.ஓ கீதா ராணி, தாசில்தார்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News