உள்ளூர் செய்திகள்

மார்கண்டேயன் எம்.எல்.ஏ. கிராம மக்களுடன் நடைபயிற்சி மேற்கொண்ட காட்சி.


விளாத்திகுளம் அருகே கிராம மக்களுடன் நடைபயிற்சி மேற்கொண்ட எம்.எல்.ஏ.

Published On 2022-09-19 09:03 GMT   |   Update On 2022-09-19 09:03 GMT
  • கிராமத்தில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து மார்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.
  • மார்கண்டேயன் எம்.எல்.ஏ. முன்னிலையில் கிராம இளைஞர்கள் மரக்கன்றுகள் நட்டனர்.

விளாத்திகுளம்:

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் பிள்ளையார்நத்தம் கிராமத்தில் மரங்கள் மக்கள் இயக்கம் சார்பாக மரங்கள் வளர்ப்பதற்கும், கிராமத்தில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் கிராம மக்களுடன் நடைபயிற்சி மேற்கொண்டவாறு மார்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் பிள்ளையார்நத்தம் முதல் வேலிடுபட்டி செல்லும் சாலையில் அமைக்கப்படும் பாலங்களின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு பருவ மழைக்கு முன்பாக பணியினை துரிதமாக முடிக்குமாறு அதிகாரி களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் மார்கண்டேயன் எம்.எல்.ஏ. முன்னிலையில் கிராம இளைஞர்கள் மரக்கன்றுகள் நட்டனர்.

நிகழ்ச்சியில் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், ஊராட்சி மன்ற தலைவர் முனீஸ்வரி, மரங்கள் மக்கள் இயக்க நிர்வாக அதிகாரி ராகவன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இம்மானு வேல், மகேந்திரன், சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News