உள்ளூர் செய்திகள்
- கடந்த 21-ம் தேதி மகளிர் சங்கத்தில் சேமிப்பு பணம் கட்டி விட்டு வருவதாக கூறி குழந்தையுடன் சென்ற சுமித்ரா வீடு திரும்பவில்லை.
- பெற்றோர் உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
தருமபுரி,மே.25-
கடந்த 21-ம் தேதி மகளிர் சங்கத்தில் சேமிப்பு பணம் கட்டி விட்டு வருவதாக கூறி குழந்தையுடன் சென்ற சுமித்ரா வீடு திரும்பவில்லை.
தருமபுரி மாவட்டம், இண்டூர் அருகே உள்ள நடப்பனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் வெளியூரில் கூலி வேலை செய்து வருகிறார்.இவருடைய மனைவி சுமித்ரா (வயது 22). இருவருக்கும் திருமணமாகி 2 வயதில் தர்ணிஷ் என்ற குழந்தை உள்ளது.
இந்நிலையில் கடந்த 21-ம் தேதி மகளிர் சங்கத்தில் சேமிப்பு பணம் கட்டி விட்டு வருவதாக கூறி குழந்தையுடன் சென்ற சுமித்ரா வீடு திரும்பவில்லை. பெற்றோர் உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து மணிகண்டன் இண்டூர் ஸ்டேசனில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சுமித்ராவையும், குழந்தையையும் தேடி வருகின்றனர்.