முல்லை பெரியாறு அணை 138 அடியை கடந்தது
- கேரளாவில் பெய்துவரும் தொடர் மழையால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது..
- இன்று காலை நிலவரப்படி நீாமட்டம் 138 அடியை கடந்தது.
கூடலூர்:
பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் கேரளாவில் கன மழை பெய்து வருகிறது. பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 138.90 அடியாக உள்ளது. ரூல்கர்வ் விதிப்படி நவம்பர் மாதத்தில் இருந்து மார்ச் மாதம் வரை மட்டுமே 142 அடி வரை தண்ணீர் தேக்க முடியும். இதனால் தற்போது அணைக்கு வரும் தண்ணீரின் பெரும்பகுதியை கேரளாவுக்கு வீணாக திறந்து விடப்படுகிறது. 9802 கன அடி நீர் வருகிறது. தமிழக பகுதிக்கு 2122 கன அடி நீரும், கேரளாவுக்கு 3680 கன அடி நீரும் திறக்கப்படுகிறது.
தண்ணீர் வரத்து அதிகரித்ததால் காலை 10 மணிக்கு 4957 கனஅடி நீர் வெளியேற்ற ப்பட்டது. இது குறித்து இடுக்கி மாவட்ட கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு முன்னதாக தகவல் தெரிவிக்கப்பட்டு ஆற்றங்கரையோரம் இருக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
இது குறித்து தமிழக விவசாயிகள் கூறுகையில், முல்லைப்பெரியாறு அணை மீது கேரள மக்கள் அச்சம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவே 30 இடங்களில் அரசு அவசர கால முகாம்களை அமை த்துள்ளது. அணையின் உபரி நீர் மட்டுமல்லாது கேரளா வனப்பகுதியில் இருந்து 18 துணை ஆறுகளின் தண்ணீரும் இடுக்கி அணைக்கு செல்கிறது. ஆனால் பெரியாறு அணையில் இருந்து மட்டுமே அதிக அளவில் தண்ணீர் வருவதாக கேரள மக்களை நம்ப வைக்க முயற்சிக்கி ன்றனர்.
இடுக்கி அணையில் இருந்து வெளியேறும் ஆற்றை பெரியாறு என அழைத்து பெரியாறு அணை மீது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த சில அரசியல் வாதிகள் விஷம பிரசாரம் செய்கின்றனர்.
இதற்காக தண்ணீரை வீணாக வெளியேற்றி வரு கின்றனர். இது கண்டிக்க த்தக்கது. முல்லை ப்பெரியாறு அணைப்பகுதி யில் வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. கடந்த 2018ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஆக்கிரமிப்பு வீடுகள் சேதம் அடைந்தது. இதனால் அணைதான் காரணம் என வதந்தி பரப்பி வருகின்றனர். இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து நமது உரிமையை மீட்க வேண்டும் என்றனர்.
வைகை அணையின் நீர்மட்டம் 70.01 அடியாக உள்ளது. 2740 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசன த்திற்காக 2257 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி. 46 கன அடி வருகிற நிலையில் திறப்பு இல்லை. சோத்து ப்பாறை அணையின் நீர்மட்டம் 126.60 அடியாக உள்ளது. 139 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் குடிநீருக்கும், மீதி உபரி யாகவும் திறக்கப்படுகிறது.
பெரியாறு 61, தேக்கடி 31.2, கூடலூர் 6.7, உத்தம பாளையம் 1.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.