பல்துறை பட்டப்படிப்பு விரைவில் அறிமுகம்: என்ஜினீயரிங் மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் படிக்க வேண்டும்
- திட்டத்தின்படி அண்ணா பல்கலக்கழகத்தில் பி.இ. பயோ என்ஜினீரிங் சேரும் மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் 3 செமஸ்டர் படிப்பார்கள்.
- மருத்துவ சாதனங்களை வடிவமைக்கும் போது மனித உடலை நன்கு புரிந்து கொள்ள இது உதவும்.
சென்னை:
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகத்துடன் இணைந்து பல்துறை பட்டப்படிப்பை அறிமுகப்படுத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தின்படி அண்ணா பல்கலக்கழகத்தில் பி.இ. பயோ என்ஜினீரிங் சேரும் மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் 3 செமஸ்டர் படிப்பார்கள்.
அவர்கள் உடற் கூறியல், உடலியல், நோயியல் மற்றும் உயிர் வேதியியல் ஆகிய பாடங்களை படிப்பார்கள். இது பொறியாளர்களுக்கு உயிரி சாதனங்கள் மற்றும் ஐ.ஒ.டி. அடிப்படையிலான பயோ சென்சார்களை உருவாக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதுள்ள பயோ மெடிக்கல் என்ஜினீயர்கள் மற்றும் மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ் படிப்புகளுடன் இந்த புதிய படிப்பையும் வழங்கும் பயோ மெடிக்கல் என்ஜினீயரிங் துறையை தொடங்க பல்கலைக்கழகம் திட்டமிட்டு உள்ளது.
மருத்துவ கல்லூரியில் படிப்பது பொறியியல் மாணவர்களின் தத்துவார்த்த அறிவை சோதிக்கும் மருத்துவ உபகரணங்களை கொண்டிருப்பதால் அவர்களுக்கு அதிக வெளிப்பாட்டை கொடுக்கும் என்றனர்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் கே.நாராயணசாமி கூறுகையில், ஒரு பொறியியல் மாணவர் இந்த படிப்பின் மூலம் மருத்துவ கள அறிவை பெறுவார். மருத்துவ கள அறிவு, மருத்துவமனைகளில் மருந்து பொறியாளர்களாக அல்லது உயிரி மருத்துவ பொறியாளர்களாக பணியாற்ற உதவும் என்றார்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் கூறும்போது, "சிண்டிகேட் அனுமதி பெற்ற பின், இரண்டு பல்கலைக்கழகங்கள் பாடத் திட்டத்தை உருவாக்கும். கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் ஏற்கனவே உள்ள பி.இ. உயிரியல் மருத்துவ பொறியியல் மாணவர்கள் கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியில் ஒரு செமஸ்டர் படிக்க அனுமதிக்க இரு பல்கலைக்கழகங்களும் உடன்பாட்டிற்கு வந்தன.
மருத்துவ சாதனங்களை வடிவமைக்கும் போது மனித உடலை நன்கு புரிந்து கொள்ள இது உதவும். பயோ மெடிக்கல் என்ஜினீயரிங் பட்டப்படிப்புக்கு பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளின் இதே போன்ற கூட்டாண்மைகளை உருவாக்கவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.