உள்ளூர் செய்திகள்

குமாரபாளையத்தில் தற்காலிக பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

Published On 2023-09-24 07:53 GMT   |   Update On 2023-09-24 07:53 GMT
  • அம்மன் நகர் சாலையில் சுமார் 20 ஆண்டுகளாக சிலரின் ஆக்கிரமிப்பால் புதிய தார் சாலை அமைக்க முடியாமல் இருந்து வந்தது.
  • தார் சாலை அமைக்கும் பணிக்கு ரூ.1 கோடியே 83 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து நகராட்சி நிர்வாக இயக்குனர் உத்தரவு பிறப்பித்தார்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அம்மன் நகர் சாலையில் சுமார் 20 ஆண்டுகளாக சிலரின் ஆக்கிரமிப்பால் புதிய தார் சாலை அமைக்க முடியாமல் இருந்து வந்தது. அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி தலைவரிடம் அம்மன் நகர் பகுதியில் தார் சாலை அமைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து அம்மன் நகர் பகுதியில் மழை நீர் வடிகால் மற்றும் தார் சாலை அமைக்கும் பணிக்கு ரூ.1 கோடியே 83 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து நகராட்சி நிர்வாக இயக்குனர் உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் சாலையில் கழிவுநீர் செல்ல பெரிய பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதில் பலரும் விழுந்து காயமடைய நேரிடு அபாயம் உள்ளது.

எனவே இந்த வடிகால் பகுதியில் தற்காலிக பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்காலிக பாலம் அமைக்கப்பட்டால் தார்ச்சாலை போடும்வரை அப்பகுதி மக்கள், பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் சிரமம் இல்லாமல் செல்வதற்கு ஏதுவாக அமையும். அதனால் நகராட்சி நிர்வாகம் இதை கருத்தில் கொண்டு தற்காலிக பாலம் அமைத்து மக்களின் சிரமங்களை தீர்த்து வைக்குமாறு இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News