பள்ளிபாளையம் அருகே காட்டுப் பகுதியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வாலிபர் பிணம்
- பள்ளிபாளையம் கீழ்காலனியில் உள்ள காட்டுப் பகுதியில் வாலிபர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
- இதுகுறித்து அந்த பகுதியினர் பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
பள்ளிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் கீழ்காலனியில் உள்ள காட்டுப் பகுதியில் வாலிபர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து அந்த பகுதியினர் பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
மனநலம் பாதித்தவர்
இதில் இறந்து கிடந்தவர் ஈரோடு மாவட்டம் காஞ்சிகோவில் பகுதியை சேர்ந்த பாலமுருகன் (33) என்பது தெரியவந்தது. இவர் அதே பகுதியில் உள்ள வேஷ்டி உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். மேலும் இவர் மனநலம் பாதித்தவர் என்றும் கூறப்படுகிறது.
பாலமுருகன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்ததால் அவரை யாராவது கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை?
இதனிடையே பாலமுரு கனை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் கொலை செய்ததற்கான அடையாளம் இல்லை. மேலும் அங்கு ரத்தம் சிதறி கிடந்த விதத்தை வைத்து அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் பாலமுருகன் எவ்வாறு இந்த பகுதிக்கு வந்தார்? அவரை யாராவது இங்கு அழைத்து வந்து கொலை செய்தனரா? அவர் எதற்காக கொலை செய்யப் பட்டார்? என்ற கோண த்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.