மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்தஅடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம்
- நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 38,334 மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்று உள்ளனர்.
- கலெக்டர் அலுவலகங்களில் செயல்படும் இ-சேவை மையங்கள் தவிர) மூலம் மிக குறைவான சேவை கட்டணத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 38,334 மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்று உள்ளனர். இவர்களில் 19,410 மாற்றுத்திறனாளிகள் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற்றுள்ளனர். மீதமுள்ள 18,924 மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை சிரமம் இல்லாமல் கிடைக்க பெறுவதற்காக சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
அதன்படி நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை அந்தந்த பகுதியில் உள்ள இ-சேவை மையங்கள் (தாசில்தார், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் செயல்படும் இ-சேவை மையங்கள் தவிர) மூலம் மிக குறைவான சேவை கட்டணத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் மாற்றுத் திறனாளி அடையாள அட்டை, மருத்துவச்சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் செல்ல வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.