காரைக்காலில் நேரு மார்க்கெட் கடைகளுக்கு சீல்
- காரைக்காலில் நேரு மார்க்கெட் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
- ஓர் ஆண்டுகளுக்கு மேலாக வியாபாரிகளுக்கு அர்ப்பணிக்கப்படாமல் இருந்துவந்தது.
புதுச்சேரி:
காரைக்காலில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த நேரு மார்க்கெட், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், அடுத்தடுத்து இடிந்து விழுந்ததால், வியாபாரிகளை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு, அதே இடத்தில், பழமை மாறாமல், புதிய நேரு மார்க்கெட் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட நேரு மார்க்கெட் திறப்பு விழா கண்டும், சுமார் ஓர் ஆண்டுகளுக்கு மேலாக வியாபாரிகளுக்கு அர்ப்பணிக்கப்படாமல் இருந்துவந்தது. வியாபாரிகளின் தொடர் கோரிக்கையை அடுத்து, கடந்த மாதம் புதிய நேரு மார்க்கெட் திறக்கப்பட்டு, 117 கடைகளில் 78 கடைகள் வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, வியாபாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒதுக்கீடு செய்யப்படாத கடைகள் சிலவற்றை அக்கடைகளின் அருகில் உள்ள வியாபாரிகள் சிலர் பயன்படுத்தி வருவதாக, நகராட்சிக்கு புகார்கள் வந்தது. இதை அடுத்து, நகராட்சி அதிகாரிகள் நேற்று நேரு மார்கெட்டுக்கு சென்று, வியாபாரிகளுக்கு ஒதுக்கப்படாத கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.