உள்ளூர் செய்திகள்
கீழ்ப்பாக்கம், ஓமந்தூரார் ஆஸ்பத்திரிக்கு புதிய டீன்கள்
- செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் நாராயணசாமி சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டீனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி டீன் ராஜஸ்ரீ, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரியின் டீனாக நியமிக்கப்படுகிறார்.
சென்னை:
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:-
செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் நாராயணசாமி சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டீனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை, ஓமந்தூரார் ஆஸ்பத்திரி டீன் ஜெயந்தி பணி ஓய்வு பெறுவதால் திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் அரசி ஸ்ரீவத்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி டீன் ராஜஸ்ரீ, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரியின் டீனாக நியமிக்கப்படுகிறார். புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி டீன் பூவதி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரியின் டீனாக நியமிக்கப்படுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.