உள்ளூர் செய்திகள்

புதிதாக திறக்கப்பட்ட கருவந்தா ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன்பு விழாவில் கலந்து கொண்ட அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட காட்சி.

கருவந்தாவில் ரூ.23 லட்சத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம்-ஆலங்குளம் யூனியன் சேர்மன் திறந்து வைத்தார்

Published On 2023-09-14 09:01 GMT   |   Update On 2023-09-14 09:01 GMT
  • கருவந்தா ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
  • விழாவில் ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார்.

தென்காசி:

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கருவந்தா ஊராட்சியில் ரூ.23.57 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.

இதில் ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் கலந்து கொண்டு ஊராட்சி மன்ற கட்டிடத்தை திறந்து வைத்தார்.

ஊராட்சி தலைவர் தானியேல் தலைமை தாங்கினார். துணை தலைவர் மங்களம், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் சுடலைகண்ணன், அமிர்தம் ஜெயபாலன், மல்லிகா, பேச்சியம்மாள், மாரி செல்வி, மெர்லின், சத்யா பெரியசாமி, ஊராட்சி செயலர் முருகேசன், சுகாதார ஆய்வாளர் ஜெய குளோரி, மக்கள் பணியாளர் விஜயராம், ஊராட்சி பணியாளர்கள் மாரியம்மாள் , சூரியமதி ராஜேஸ்வரி, அரசு ஒப்பந்தக்காரர் தானியேல் ஞானராஜா, பால்ராஜ், கருவந்தா மற்றும் ஊர் நாட்டாமைகள், விவே கானந்தா பள்ளி நிர்வாகி பால்ராஜ், தொழிலதிபர் யேசுதாஸன் மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கருவந்தா ஊராட்சி மன்ற தலைவர் தானியேல் சால்வை அணிவித்து வரவேற்றார்.

Tags:    

Similar News