சங்கரன்கோவிலில் அரசு கலைக்கல்லூரியில் புதிய மின் மாற்றி-ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- புதிய கட்டிடத்திற்கு தேவைப்படும் மின்சாரத்திற்கான மின்மாற்றி உடனடியாக அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
- நிகழ்ச்சியில ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மின் மாற்றியை கல்லூரி பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரி புதிய கட்டிட பணிகள் முடிவுற்று தற்போது திறக்கப்படும் சூழ்நிலையில் உள்ளது.
மின்மாற்றி
இந்நிலையில் புதிய கட்டிடத்திற்கு தேவைப்படும் மின்சாரத்திற்கான மின்மாற்றி உடனடியாக அமைக்க வேண்டும் என கல்லூரி நிர்வாகம் சார்பில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த ராஜா எம்.எல்.ஏ. புதிய மின்மாற்றி அமைக்க ஏற்பாடு செய்தார். இந்நிலையில் இந்த மின் மாற்றி கல்லூரியின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
சங்கரன்கோவில் மின்சார வாரிய செயற் பொறியாளர் பாலசுப்பிர மணியன் தலைமை தாங்கினார்.. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் விக்டோரியா தங்கம், சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் வடக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு இந்த மின் மாற்றியை கல்லூரி பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
இதில் மின்வாரிய இளநிலை செயற்பொறி யாளர் கணேஷ் ராம கிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர்கள் ரவி ராமதாஸ், முஜ்பின் ரகுமான், கல்லூரி பேராசிரியர்கள் வேணு கோபால், பாலமுருகன், தி.மு.க. மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் உதய குமார், மின்வாரிய தொ.மு.ச. திட்டச் செய லாளர் மகாராஜன், அரசு ஒப்பந்ததாரர் ஜலால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.