உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

ஜெர்மன் நிறுவனம் சார்பில் 550 கிலோ துணி தயாரிக்கும் நிட்டிங் எந்திரம் தயாரிப்பு

Published On 2022-06-11 04:59 GMT   |   Update On 2022-06-11 04:59 GMT
  • புதுமைகளும், மாற்றங்களும் திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையின் வளர்ச்சிக்கு உந்துசக்தியாக திகழ்கிறது.
  • மின் பயன்பாடு, தொழிலாளர் தேவை குறையும். அதேநேரம், துணி உற்பத்தி அதிகரிக்கும்.

திருப்பூர்,

திருப்பூரின் பின்னலாடை உற்பத்தி சங்கிலியில்மு தல் நிலையில் உள்ளது நிட்டிங். நூலை துணியாக்கி, பின்னலாடை தயாரிப்புக்கு நிட்டிங் நிறுவனங்கள் கைகொடுக்கின்றன.துவக்க காலங்களில் உள்நாட்டில் தயாரான கையால் சுற்றும் நிட்டிங் எந்திரங்களே பயன்பாட்டில் இருந்தன. காலப்போக்கில் அறிமுகமான வெளிநாட்டு எந்திரங்கள்,நிட்டிங் துறையின் நவீன மயமாக்கலுக்கு கைகொடுத்தன. துணியின் தன்மை மற்றும் தரத்தை பொறுத்தே, பின்னலாடைகளின் ஆடைகளின் தரம் முதலானவை அமைகின்றன.

திருப்பூர் நிட்டிங் துறையினர், சர்வதேச அளவில் அறிமுகமாகும் நவீன எந்திரங்களை உடனடியாக கண்டறிந்து நிறுவி பின்னல் துணி தயாரிப்பை தொடர்ந்து மேம்படுத்திவருகின்றனர்.நிட்டிங்கில் ஏற்பட்டுவரும் புதுமைகளும், மாற்றங்களும் திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையின் வளர்ச்சிக்கு உந்துசக்தியாக திகழ்கிறது.

தைவான், ஜெர்மனி, சீனா உள்பட பல்வேறு நாட்டு நிறுவனங்கள் தொடர் ஆராய்ச்சிகள் மூலம், அதிக உற்பத்தி திறன் மிக்க நிட்டிங் எந்திரங்களை உருவாக்கிவருகின்றன.குளிர் கால பின்னலாடை தயாரிப்புக்கு ரிப் நிட்டிங் எந்திரங்கள் கைகொடுக்கின்றன. ஜெர்மனி நாட்டு நிறுவனம் இதுவரை இல்லாதவகையில் அதிவேக இயங்கு திறன் மிகுந்த ரிப் நிட்டிங் எந்திரத்தை தயாரித்து, அறிமுகப்படுத்தியுள்ளது.

பயன்பாட்டில் உள்ள எந்திரங்களைவிட இப்புதிய எந்திரத்தில் நாளொன்றுக்கு கூடுதலாக 250 கிலோ துணி உற்பத்தி செய்யமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்து தென்னிந்திய இறக்குமதி எந்திர பின்னல் துணி உற்பத்தியாளர் சங்க (சிம்கா) தலைவர் விவேகானந்தன் கூறியதாவது:-

ரிப் நிட்டிங் எந்திரத்தில் இருபுறமும் பின்னல் முடிச்சு கொண்ட துணி தயாரிக்கலாம். சாதாரண பின்னல் துணி 140 முதல் 180 ஜி.எஸ்.எம்.,ல் எடை குறைவாக இருக்கும். ரிப் நிட்டிங் எந்திரத்தில் 200 முதல் 220 ஜி.எஸ்.எம்.,ல் அதிக எடையுள்ள துணி தயாரிக்கப்படுகிறது.அந்தவகையில் இந்த எந்திரம் குளிர் கால ஆடை ரகங்கள் தயாரிப்புக்கு கைகொடுக்கிறது. திருப்பூரில் தற்போது பயன்பாட்டில் உள்ள ரிப் நிட்டிங் எந்திரங்கள் 25 முதல் 30 ஆர்.பி.எம்., வேகத்திலும், நாளொன்றுக்கு 300 முதல் 350 கிலோ துணி உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளன.ஜெர்மனி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள அதிநவீன எந்திரம் 50 ஆர்.பி.எம்., என்கிற அதிவேக இயங்கு திறன் கொண்டது. எந்திரத்தில் நாளொன்றுக்கு 550 கிலோ துணி உற்பத்தி செய்யமுடியும்.மூன்று எந்திரத்திற்கு பதில் இந்தப் புதுவகை ரிப் நிட்டிங் எந்திரம் இரண்டை மட்டும் நிறுவினால் போதும். இதனால் நிறுவனங்களின் முதலீடு வெகுவாக குறையும். நிறுவனத்தில் இடம் மீதமாகும். மின் பயன்பாடு, தொழிலாளர் தேவை குறையும். அதேநேரம், துணி உற்பத்தி அதிகரிக்கும்.

போட்டி நிறைந்த உலகில், செலவினங்களை குறைத்து, உற்பத்தியை அதிகரிப்பதற்கு, இத்தகைய புதிய தொழில்நுட்பங்கள் இன்றியமையாததாகின்றன.நிட்டிங் துறையில் ஏற்பட்டுவரும் தொழில்நுட்ப மாறுதல்கள், ஒட்டுமொத்த பின்னலாடை துறையையும் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு அழைத்துச்செல்லும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News