குமரி தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் போலீசாருடன் கட்சி முகவர்கள் வாக்குவாதம்
- முகவர்களை போலீசார் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதித்தனர்.
- சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நாகர்கோவில் கோணம் என்ஜினீயரிங் கல்லூரியில் இன்று காலை தொடங்கியது. இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.
அந்தப் பகுதயில் போக்கு வரத்தும் மாற்றி அமைக்கப் பட்டு இருந்தது. அந்த பகுதி யில் பேரி கார்டுகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். வாக்கு எண்ணும் பணிக்கான ஊழியர்கள் மற்றும் முகவர்கள் அடையாள அட்டை காண்பித்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
வாக்கு எண்ணிக்கை நடை பெறும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்ட முகவர்களை போலீசார் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதித்தனர். அவர் களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் படிவம் 18 வைத்திருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்க முடியும் என்று பணியில் இருந்த போலீசார் தெரிவித்தனர்.
ஆனால் ஒரு சில முகவர்கள் மட்டுமே படிவம் 18 வைத்திருந்தனர். படிவம் 18 இல்லாத முகவர்களை போலீசார் வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைய அனுமதிக்கவில்லை. இதனால் முகவர்கள், போலீசாருடன் வாக்குவாதத்தில் இதைத்தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்தின் வெளியே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு படிவம் 18 இல்லாமல் அடையாள அட்டை வைத்திருந்த முகவர்களை போலீசார் அனுமதித்தனர். இந்த சம்பவத்தால் நாகர்கோவில் வாக்கு எண்ணும் மையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.