- 2 கடைகளில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணெய் மீண்டும் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
- தடை செய்யப்பட்ட ரசாயன பொருட்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், தாபாக்களில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் மற்றும் தடை செய்யப்பட்ட ரசாயன பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பானு சுஜாதா மேற்பார்வையில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் அலுவலர்கள் அனுமந்தபுரம், எலுமிச்சன அள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டல் மற்றும் தாபாக்களில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது 2 கடைகளில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணெய் மீண்டும் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 5 லிட்டர் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட ரசாயன பொருட்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
மளிகை கடைகளில் நடத்திய சோதனையில் காலாவதியான கடலை மாவு மற்றும் பல்வேறு உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தின்பண்டங்களில் தயாரிப்பு தேதி, காலாவதி ஆகும் தேதி பொறிக்கப்படாதது கண்டறியப்பட்டு அவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 4 கடைகளுக்கு தலா ரூ.1,000 வீதம் 4 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.