பெரம்பலூரில் இன்று அண்ணாமலை யாத்திரை
- பெரம்பலூரில் இன்று அண்ணாமலையின் பாதயாத்திரை நடைபெறுகிறது
- நாளை லால்குடியில் நடக்கிறது
பெரம்பலூர்,
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கும் என் மண், என் மக்கள் யாத்திரை நிகழ்ச்சி பெரம்ப லூரில் இன்று நடைபெறு கிறது .
பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் இன்று மாலை 5 மணிக்கு தொடங்கும் யாத்திரை ரோவர் ஆர்ச், சங்குப்பேட்டை, சிவன் கோவில், கடைவீதி, தெப்ப குளம், கனரா வங்கி, அம்பேத்கர் சிலை, பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை வழியாக காமராஜர் வளைவு பகுதியில் நிறைவடைகிறது. அங்கு அமைக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட மேடையில் அண்ணாமலை பேசுகிறார்.
இந்த யாத்திரையில் பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகா னந்தம், மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து அவர் நாளை(17-ந்தேதி) லால்குடி தொகுதியில் மதியம் 3 மணிக்கு தனது யாத்திரையை தொடங்குகிறார். லால்குடி அருகே ஆங்கரை பிள்ளையார் கோவில் அருகில் யாத்திரையை தொடங்கும் அண்ணா மலைக்கு புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன், மாவட்ட பார்வையாளர் யோகிதாசன் தலைமையில் பா.ஜ.க.வினர் வரவேற்பு அளிக்க உள்ளனர்.
திருச்சி மெயின் ரோடு வழியாக ஆங்கரை, மலை யப்பபுரம், சந்தைப்பேட்டை, லால்குடி ரவுண்டானா சென்று அங்கு நடைபெறும் கூட்டத்தில் பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை புறநகர் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் செய்து வருகின்றனர்