உள்ளூர் செய்திகள்

புத்தக திருவிழா

Published On 2023-03-18 09:13 GMT   |   Update On 2023-03-18 09:13 GMT
  • முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம்...
  • ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற செய்ய முடிவு

பெரம்பலூர்

பெரம்பலுாரில் புத்தக திருவிழாவினை சிறப்பாக நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்து அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மாவட்டந்தோறும் புத்தகக திருவிழாக்கள் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் 8-வது புத்தக திருவிழா வருகிற 25-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி வரை பெரம்பலூர் நகராட்சி திடலில் நடத்தப்பட உள்ளது. மாவட்ட நிர்வாகமும், பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றமும் இணைந்து நடத்தவுள்ள இந்த புத்தகக திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட பதிப்பகத்தாரின் அரங்குகள், 1,000-க்கும் மேற்பட்ட தலைப்புகளிலான 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெறவுள்ளது. மேலும் புத்தக திருவிழாவில் தமிழ்நாட்டின் தலைசிறந்த பேச்சாளர்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் பங்குபெற உள்ளார்கள். மேலும், அனைத்து புத்தகங்களும் 10 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது. புத்தக திருவிழாவில் ஒவ்வொரு துறையின் சார்பிலும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் பணிகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் மேற்கொள்ள வேண்டும், என்றார்.

Tags:    

Similar News