- பெரம்பலூரில் உயர்கல்வி வழிகாட்டல் பயிலரங்கம் நடைபெற்றது
- பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 12-ம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் பள்ளி கல்விதுறை சார்பில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் உயர்கல்வி வழிகாட்டல் குறித்து ஒருநாள் பயிலரங்கம் ரோவர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
பயிலரங்கிற்கு ரோவர் கல்வி நிறுவனங்களின் மேலாண் தலைவர் வரதராஜன் தலைமை வகித்தார். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலர் ஜெய்சங்கர் ( இடைநிலை), உதவித் திட்ட அலுவலர் ரமேஷ் (தொடக்கநிலை) ஆகியோர் முன்னிலை வகித்து தொடங்கி வைத்தனர். மாதிரிப் பள்ளிகள் மண்டல ஒருங்கிணைப்பாளர் ராசபாண்டியன் சிறப்புரையாற்றினார். கனகராஜ், கார்த்திக், அனன்சியா ஆகியோர் கருத்தாளராக கலந்துகொண்டு ஜே.இ.இ, நீட், கிளாட் போன்ற நுழைவுத்தேர்வுகளுக்கு விண்ணப்பித்தல், பங்கேற்றல் மற்றும் உயர் கல்வி குறித்த பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
இதில் ரோவர் பள்ளி தலைமையாசிரியர் செல்வராஜ், வட்டார வள மைய மேற்பார்வையாளர் தேவகி, உயர்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மகாதேவன், உள்ளடங்கிய கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாரதிதாசன், ஆசிரியர் பயிற்றுநர் கீர்த்தனா மற்றும் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 12-ம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.