உள்ளூர் செய்திகள்

வெளிமாநில தொழிலாளர்களுடன் அதிகாரிகள் சந்திப்பு

Published On 2023-03-12 02:31 GMT   |   Update On 2023-03-12 02:31 GMT
  • பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களை சந்தித்தனர்
  • அச்சுறுத்தல், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தல்

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர்கள் பாஸ்கரன், மூர்த்தி மற்றும் தொழிலாளர் அலுவலர் சாந்தி ஆகியோர் கொண்ட குழுவினர் பல்வேறு இடங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து அவர்களின் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தனர்.இதே போல் திருச்சி தொழிலாளர் நலத் துறை இணை ஆணையர் திவ்யநாதன், பெரம்பலூர் அஸ்வின்ஸ் தொழிற்சாலை மற்றும் கம்பெனிகள், ஓட்டல்கள் போன்ற பல்வேறு இடங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து அவர்களின் பாதுகாப்பு மற்றும் தங்குமிடம், பணிபுரியும் இடத்தில் குறைபாடு மற்றும் வசதிகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.அப்போது அவர்களிடம் பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல் குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம். நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்பதை வாட்ஸ்-அப் மூலமாகவோ, போன் மூலமாகவோ உங்கள் குடும்பத்திற்கு தகவல் தெரியபடுத்துங்கள். உங்களுக்கு தேவையான பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். ஆய்வின்போது தொழிலாளர் உதவி ஆணையர் பாஸ்கரன், தொழிலாளர் அலுவலர் சாந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News