உள்ளூர் செய்திகள்

டோல்கேட் பணியாளர்கள் போராட்டத்தால் கட்டணமின்றி குஷியாக செல்லும் வாகன ஓட்டிகள்

Published On 2022-10-03 08:35 GMT   |   Update On 2022-10-03 08:35 GMT
  • டோல்கேட் பணியாளர்கள் போராட்டத்தால் கட்டணமின்றி குஷியாக வாகன ஓட்டிகள் செல்கின்றனர்.
  • 3-வது நாட்களாக போராட்டம்

பெரம்பலூர்:

பெரம்பலூர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, திருமாந்துறை சுங்கச்சாவடியில் பணியாற்றிய 28 பேரை பணிநீக்கம் செய்த ஒப்பந்த தனியார் நிறுவனத்தை கண்டித்து, சுங்கச்சாவடியில் பணிபுரியும் பணியாளர்கள் நேற்று முன்தினம் முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2-வது நாளான நேற்று சுங்கச்சாவடி பணியாளர்களில் சிலர் தங்களது குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த தனியார் நிறுவனத்தை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் 3-வது நாளாக அந்த சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படாததாலும், பாஸ்ட் டேக் செயல்படாததாலும், வாகன ஓட்டிகள் கட்டணமின்றி குஷியாக சென்று வருகின்றனர். ஆயுதபூஜை, காலாண்டு விடுமுறை உள்ளிட்ட தொடர் விடுமுறையினால் அந்த சாலை வழியாக அதிகமான வாகனங்கள் கடடணமின்றி செனறு வருவதால் சுங்கச்சாவடி ஒப்பந்த தனியார் நிறுவனத்துக்கு அதிகளவுல் நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News