உள்ளூர் செய்திகள்

தென்காசி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு நிரந்தர தடை-கலெக்டர் ரவிச்சந்திரன் தகவல்

Published On 2023-09-26 09:04 GMT   |   Update On 2023-09-26 09:04 GMT
  • பிளாஸ்டிக் பைகள், குடிநீர் பாட்டில்கள் உள்ளிட்டவை பயன்பாட்டை தடுக்க வேண்டும்.
  • பொருட்கள் வாங்க செல்லும்பொழுது துணிப்பைகளை எடுத்து செல்ல வேண்டும்.

தென்காசி:

தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியருப்பதாவது:-

தமிழக அரசால் முன்னெடுக்கப்பட்டுள்ள மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தினை தென்காசி மாவட்டம் முழுவதும் நடைமுறைப்படுத்திட ஏதுவாக மாவட்டம் முழுவதும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.

இதனை மாவட்டம் முழுவதும் அமல்படுத்தி பசுமை மாவட்டமாக உருவாக்கும் நோக்கில் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தாள்களில் வழங்கப்படும் உணவு பொட்டலங்கள், பிளாஸ்டிக் மேசை விரிப்பு, பிளாஸ்டிக் கால் செய்யப்பட்ட தட்டுகள், தேநீர் குவளைகள், குடிநீர் பாட்டில்கள், பாக்கெட்டுகள் பயன்பாட்டை தடுக்க வேண்டும்.

மேலும் பொதுமக்களும், வணிகர்களும் தடை செய் யப்பட்ட இந்த பொருட்களை பயன் படுத்துவதை கைவிட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். பொதுமக்கள் தங்கள் வீட்டு கழிவுகளை மக்கும், மக்காத கழிவுகள் என தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்கிட வேண்டும். மேலும் கடை வீதிகளில் பொருட்கள் வாங்க செல்லும்பொழுது துணிப்பைகளை எடுத்து செல்ல வேண்டும்.

வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்பாக அரசு அலுவ லர்களால் எவ்வித முன்னறி விப்புமின்றி திடீர் ஆய்வுகள் மேற் கொள்ளப் படும்.

அப்போது அந்த பொருட் களின் பயன்பாடு கண்டறி யப்பட்டால் அவற்றை பறிமுதல் செய்வதோடு அபராதமும் விதிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News