உள்ளூர் செய்திகள்

வீரபாண்டி அடுக்குமாடி குடியிருப்போர் சங்கம் சார்பில் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த போது எடுத்த படம்.

வீரபாண்டி அடுக்குமாடி குடியிருப்போர் சங்கம் சார்பில் கலெக்டரிடம் மனு

Published On 2023-06-26 07:58 GMT   |   Update On 2023-06-26 07:58 GMT
  • வேகத்தடை அமைக்க வேண்டும்
  • ஆரம்ப பள்ளி ஒன்றை துவக்க வேண்டும்.

திருப்பூர்:

வீரபாண்டி அடுக்குமாடி குடியிருப்போர் சங்கம் சார்பில் இன்று மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது; திருப்பூர் வீரபாண்டியில் தமிழ அரசால் கட்டப்பட்டு அண்மையில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்து அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருகிறோம்.

இங்கு கழிவு நீர் சுத்தகரிப்பு தொட்டி பாரமரிப்பு இல்லாத காரணத்தால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. போதிய குடிநீர் கிடைக்கவில்லை. குடியிருப்பு பகுதி ரோட்டில் அடிக்கடி விபத்து நடப்பதால் வேகத்தடை அமைக்க வேண்டும்.

குடியிருப்பு பகுதிகளை சுற்றி சுற்றுசுவர் அமைக்க வேண்டும். அருகில் உள்ள 3 மதுக்கடைகளை அகற்ற வேண்டும். எங்கள் பகுதியில் ரேஷன் கடை திறக்க வேண்டும். இந்த பகுதியில் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் ஆரம்ப பள்ளி ஒன்றை துவக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தங்களது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி கவனம் ஈர்த்தனர்.

Tags:    

Similar News